ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80-வது பிறந்தநாள் : சிறப்பு வீடியோ வெளியிட்டு கூகுள் டூடுல் கௌரவம்

3 years ago 624

Google-Doodle-pays-tribute-to-scientist-Stephen-William-Hawking-on-his-80th-birth-anniversary

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்ததினத்தையொட்டி, பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம், சிறப்பு கவன ஈர்ப்புத் சித்திர வீடியோவை வெளியிட்டு கௌரவித்துள்ளது.

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், 1942-ம் ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி, இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்தார். இயற்பியலாரான இவர், அண்டவெளியை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டதால், இளம் வயதிலேயே ‘ஐன்ஸ்டீன்’ என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார். தனது 21 வயதில் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் என்னும் குணப்படுத்த முடியாத நரம்பு நோயினால், கை, கால் முதலிய உடலியக்கங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பேச்சற்ற நிலையிலும், தொழில்நுட்ப உதவியுடன் தன்னுடைய பணிகளைச் செய்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங், ஆக்ஸ்போர்டில் இளங்கலையில் இயற்பியல் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆராய்ச்சி (Ph.D) பட்டமும் பெற்றவர். தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியாராக 1979 முதல் சுமார் 30 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் தனது 67-வது வயதில், 2009-ல் பணி மூப்பு பெற்றார். ஸ்டீபக் ஹாக்கிங் அண்டவெளியின் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுப்பிடிப்புகளை வெளியிட்டவர். குறிப்பாக அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு, கருங்குழி வெப்ப இயக்கவியல் குறித்த அவரது ஆய்வுக்கட்டுரைகள் அறிவியலுக்கு முக்கிய பங்களிப்பு ஆற்றியலை என்பது குறிப்பிடத்தக்கது.

image

அறிவியல் துறையில் இயற்பியலில் அளப்பரிய சாதனைகளை படைத்த ஸ்டீபன் ஹாக்கிங் 2018 மார்ச் 14-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினமான இன்று, 80-வது பிறந்தநாளையொட்டி, அவரது உன்னதமான உத்வேக கருத்துகளுடன், கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான சித்திர வீடியோவை கூகுள் நிறுவனம், கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

Read Entire Article