பிரேசில்: சோகத்தில் முடிந்த படகு சவாரி - 8 சுற்றுலாப் பயணிகள் மரணம்

3 years ago 1232

பிரேசிலில் படகு சவாரியின் போது பாறை விழுந்து நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மினாஸ் கெராய்ஸ் மாகாணத்தில் உள்ள அருவி வந்து விழும் தடாகத்தில் பலரும் படகில் சவாரி செய்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். எதிர்பாரா தருணத்தில், உயர்ந்து வளர்ந்திருந்த மலை முகட்டில் இருந்த பாறைகள் உடைந்து விழுந்தன.

image

மூன்று படகுகள் மீது பாறைகள் விழுந்ததில் அதில் பயணித்தவர்களில் 8 பேர் உயிரிழந்தனர். இன்னும் 2 பேரை காணவில்லை. 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 20 பேரைக் காணவில்லை என முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் பனிப்புயலில் சிக்கி 22 சுற்றுலாப் பயணிகள் பலி

Read Entire Article