’வலிமை’ பட வெளியீடு ஒத்திவைப்பு: போனிகபூர் அறிவிப்பு

3 years ago 1431

Puthiyathalaimurai-logo

சினிமா

06,Jan 2022 06:50 PM

actor-ajith-Valimai-Postponed

’வலிமை’ பட வெளியீட்டை ஒத்தி வைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜனவரி 13 ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக இருந்தது.

image

இந்த நிலையில், கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பட வெளியீட்டை ’வலிமை’ படக்குழு ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்டப் படங்கள் இதே காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி: கொரோனா பரவல் எதிரொலி: தள்ளிவைக்கப்படும் மாஸ் ஹீரோக்களின் பிரம்மாண்ட படங்கள்

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article