மொத்தவிலை பணவீக்கம் செப்டம்பரில் குறைந்தது

3 years ago 957

புதுடில்லி:நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த செப்டம்பர் மாதத்தில் சற்று குறைந்து, 10.66 சதவீதமாக உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் விலை அதிகரித்திருந்த போதிலும், உணவு பொருட்கள் விலை குறைந்ததால், மொத்தவிலை பணவீக்கம் குறைந்துள்ளது.இது குறித்து, அமைச்சகம் மேலும்தெரிவித்துள்ளதாவது:மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது மாதமாக, இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 11.39 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் சற்று குறைந்து 10.66 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இதுவே 1.32 சதவீதமாக இருந்தது.நடப்பாண்டு செப்டம்பரில் பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு, ரசாயன பொருட்கள் ஆகிய வற்றின் விலை உயர்ந்தது காரணமாக அமைந்தது.

அதே சமயம் உணவு பொருட்கள் பணவீக்கம் தொடர்ந்து 5 மாதங்களாக குறைந்துள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article