டிம் குக் சம்பளம் 1,400 மடங்கு அதிகம்

3 years ago 907

டிம் குக் சம்பளம் 1,400 மடங்கு அதிகம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
01:24

புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், அந்நிறுவனத்தின் பணிபுரிபவர்களின் சராசரி சம்பளத்தை விட 1,400 மடங்கு அதிகம் பெற்றுள்ளார்.
இவரது சம்பள மதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்ததற்கு முக்கிய காரணம், அவருக்கு ஊதியமாக கிடைத்த நிறுவன பங்குகள் தான்.ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சராசரி சம்பளம், 2021ல், கிட்டத்தட்ட 51 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2020ல், சராசரி சம்பளம் 43 லட்சம் ரூபாயாக இருந்தது. அந்த ஆண்டில் டிம் குக்கின் சம்பளம் 256 மடங்கு அதிகமாக இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்றினால், வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்ததை அடுத்து, ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்தது.
கடந்த ஆண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 30 சதவீதம் உயர்ந்து, 28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, விரைவில் 3 டிரில்லியன் டாலர் அதாவது, 222 லட்சம் கோடி ரூபாயை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.டிம் குக்கின் அடிப்படை சம்பளம் 2,200 கோடி ரூபாய்.
மேலும், 60 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு பரிசு வாயிலாகவும், இலக்கை எட்டியதற்காக 8,880 கோடி ரூபாயும், இன்சூரன்ஸ் இதர வகைகளையும் சேர்த்து மொத்தம் 73 ஆயிரத்து, 38 கோடி ரூபாயை 2021ல் ஊதியமாக பெற்றிருக்கிறார்.இந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டில், 10 ஆயிரத்து, 952 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news

மைக்ரோ ஏ.டி.எம்., என்றால் என்ன? அந்த வசதியைபயன்படுத்துவது எப்படி?ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.கடைகளில் ... மேலும்

business news

‘டிஜிட்டல்’ வழிகளை நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் ... மேலும்

business news

சந்தை மதிப்பில் சாதனைமும்பை பங்குச் சந்தையின், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தளத்தில் ... மேலும்

business news

புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நடப்பு ஆண்டில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு ... மேலும்

business news

புதுடில்லி:பெங்களூருவை சேர்ந்த ‘குரோ’ எனும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை ... மேலும்

மேலும் செய்திகள் ...

Advertisement

Advertisement

Advertisement

dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
Read Entire Article