பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு

3 years ago 962

Puthiyathalaimurai-logo

உலகம்

07,Oct 2021 08:32 AM

At-least-20-people-have-been-killed-in-a-powerful-earthquake-in-Pakistan-this-morning

பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாய் பகுதியிலிருந்து வடகிழக்கே 14 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article