நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 54.35 சதவீதம் குறைந்தது

3 years ago 945

புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த செப்டம்பர் மாதத்தில், 5 மாதங்களில் இல்லாத வகையில் 54.35 சதவீதம் என்ற அளவில் நன்றாக குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 5.30 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 4.35 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 7.27 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம்மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த செப்டம்பரில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்ததற்கு முக்கிய காரணம், உணவு பொருட்கள் விலை குறைந்ததே ஆகும்.

உணவு பொருட்கள் பிரிவில் பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 3.11 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 0.68 சதவீதமாக குறைந்துள்ளது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது.

நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கிக்கு சில்லரை பணவீக்க இலக்கு 4 சதவீதமாக இருக்க, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 2 சதவீதம் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.இந்த வகையில் செப்டம்பரில் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கிக்கான இலக்குக்குள் இருக்கிறது.நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி அண்மையில் நடந்த அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில் அறிவித்தது.

Read Entire Article