தொழில் துறை உற்பத்தி ஆகஸ்டில் வளர்ச்சி

3 years ago 914

புதுடில்லி:மத்திய புள்ளியியல் அலுவலகம், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படையிலான தரவு களை நேற்று வெளியிட்டது.

இதன்படி, நாட்டின் தொழில்துறை உற்பத்தி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 7.1 சதவீதமாக இருந்தது.மேலும் நடப்பு ஆண்டு ஆகஸ்டில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி 9.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதேபோல், சுரங்க துறை உற்பத்தி 23.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சார உற்பத்தியும் 16 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், தொழில்துறை உற்பத்தி 28.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் மைனஸ் 18.7 சதவீதமாக சரிந்திருந்தது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்குகள் அதிகம் இருந்ததை அடுத்து, இந்த சரிவு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரலில், அதிகபட்சமாக மைனஸ் 57.3 சதவீதமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article