"தடை செய்யப்பட்ட மயக்க மருந்தை பயன்படுத்தினேன்" - குற்றத்தை ஒப்புக்கொண்டார் சாம்சங் தலைவர்

3 years ago 322

Samsung-leader-Lee-Jae-yong-pleads-guilty-to-using-banned-anesthetic-in-Seoul-Court-South-Korea

உலகின் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தலைவர் ஜெய் ஒய்.லீ, தடை செய்யப்பட்ட மயக்க மருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். 

image

2015 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டு காலம் மயக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக அந்த நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள சியோல் நீதிமன்றத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தென் கொரிய நாட்டு சட்டத்தின்படி அனுமதி இல்லாத மயக்க மருந்துகளை பயன்படுத்துவது குற்றமாகும்.

தோல் சிகிச்சையின் காரணமாக அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க மருந்தான புரோபோபோலை (Propofol) பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். அவர் பயன்படுத்திய அதே மயக்க மருந்தை தான் பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனும் பயன்படுத்தியுள்ளார். 

கங்னம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று தனக்கு இந்த மருந்தை பரிந்துரை செய்ததாக தெரிவித்துள்ளார் அவர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அடுத்த இரண்டு வாரங்களில் இறுதி முடிவை எடுக்க உள்ளது. 

image

அதே நேரத்தில் லீ-க்கு இந்த மருந்தை பரிந்துரைத்த மருத்துவமனை ஊழியர்கள் மீது தனி வழக்கு ஒன்று பாய்ந்து விசாரணை நடந்து வருகிறது.

53 வயதான லீ பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார். அதில் சில வழக்குகளில் தண்டனையும் அவர் பெற்றுள்ளார். தற்போது கூட லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவர் பிணையில் வெளி வந்துள்ளார். ஆனால் அதில் சில தனக்கு எந்த தொடர்பு இல்லை என்றும் தான் குற்றமற்றவர் என்றும் அவர் சொல்லி உள்ளார். 

“எனது தனிப்பட்ட விருப்பினால் இதுபோன்ற தொந்தரவு மற்றும் வருத்தம் ஏற்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்” என நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார் லீ. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 297-வது இடத்தில் உள்ளார் அவர். 

Read Entire Article