‛ஒமைக்ரானை' தொடர்கிறது புதிய வகை கோவிட் ‛டெல்டாக்ரான்'

3 years ago 942

நிகோசியா: உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஓமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

latest tamil news

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவத் துவங்கிய கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளிலும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2021ல் கோவிட்டின் இரண்டாவது அலை ஏற்பட்டது. அதில் கோவிட் 19, டெல்டா என்று உருமாற்றம் அடைந்தது

இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்தன. தற்போது 2022ல் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் ‛ஒமைக்ரான்' என்ற புதிய வகை கோவிட் பரவி வருகிறது. இதன் பரவல் டெல்டா வகை கோவிட்டை காட்டிலும் வேகமாக இருந்தாலும் இதுவரை பாதிப்பு குறைந்த அளவே உள்ளது.

latest tamil news

இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கோவிட்டினை கண்டு பிடித்துள்ளனர். இது டெல்டா மரபு பின்னணியையும் ஒமைக்ரான் வகை கோவிட்டின் குணங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டெல்டாக்ரானால் சைப்ரஸ் நாட்டில் இது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Ramesh Sargam வைரஸ் தடுப்புக்கு மருந்து கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ, இப்படி புது புதுசா வரும் வைரஸ்களுக்கு பெயர் வைப்பதில் நம்ம ஆளுங்க கில்லாடிகள்... எப்படி? ரூம் போட்டு யோசிப்பார்களா...??

Cancel

Saai Sundharamurthy A.V.K இதை உடனே இந்தியாவில் பரப்பி விடுவார்களே!! உலகில் எங்கு, என்ன சனியன் நடந்தாலும் இந்தியாவை பலிகடா ஆக்காமல் விடமாட்டார்கள். கடந்த 80 ஆண்டுகளாக இதை தான் கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது வெளிநாட்டு ஊடகங்கள்.

Cancel

VENKATASUBRAMANIAN இதைப்பார்த்தால் medical mafia உள்ளதோ என்று சந்தேகிக்க வைக்கிறது. உலக நாடுகள் ஒன்றிணைந்து கண்டு பிடிக்க வேண்டும்.

Cancel

மேலும் 1 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article