அல்பேனியா: கடற்கரை ரிசார்ட்டில் இறந்து கிடந்த 4 ரஷ்ய சுற்றுலா பயணிகள்

3 years ago 933

4-Russian-tourists-found-dead-at-Albania-beach-resort

மேற்கு அல்பேனியாவில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் நான்கு ரஷ்ய சுற்றுலா பயணிகள் இறந்து கிடந்ததாக அல்பேனிய போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அல்பேனிய காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “31 முதல் 60 வயதுடைய 4 ரஷ்யர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் கெரெட் கிராமத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலான சானாவில் இறந்து கிடந்தனர். மரணத்தின் காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.

அல்பேனியா தலைநகர் திரானாவிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஐந்து நட்சத்திர ரிசார்ட்டில் ஒரு வாரமாக தங்கியிருந்த குழுவில் 31 முதல் 60 வயதுடைய ரஷ்ய சுற்றுலா பயணிகள் இருந்தனர். இறந்தவர்களின் குடும்பப் பெயர்கள் காரணமாக அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதனைப்படிக்க...“நாங்கள் எல்லோரும் எங்கள் அணியின் கேப்டன் தோனிக்காக விளையாடினோம்” - தீபக் சாஹர்! 

Read Entire Article