அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

3 years ago 503

A-fire-in-the-United-States-has-left-13-people-dead-including-seven-children

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஃபிலடெல்ஃபியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றிக்கொண்டதை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள், 50 நிமிடங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், 7 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் தீயில் கருகி உயிரிழந்து விட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 8 பேர் தீ விபத்திலிருந்து தப்பிவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

image

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள புகை கண்டறியும் கருவிகள் செயல்படவில்லை என்று தீயணைப்புப்படையினர் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: பிரதமர் ஹம்டோக் ராஜினாமா.. ஆட்சிக்கவிழ்ப்பு எதிரொலி - சூடானில் தீவிரமடையும் போராட்டங்கள்

Read Entire Article