2021 இலக்கியத்துக்கான நோபல் பரிசு - எழுத்தாளர் அப்துல்ரசாக் குருனாவுக்கு அறிவிப்பு

3 years ago 835

2021-Nobel-Prize-in-Literature-is-awarded-to-the-novelist-Abdulrazak-Gurnah

இலக்கியத்திற்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு எழுத்தாளர் அப்துல் ரசாக் குருனாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நோபல் பரிசுக்கு தேர்வாகியிருப்பது தொடர்பான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. முன்னதாக கடந்த 3 தினங்களாக மருத்துவம் - இயற்பியல் - வேதியியல் ஆகியவற்றுகான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த வரிசையில் இன்று இலக்கியத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING NEWS:
The 2021 #NobelPrize in Literature is awarded to the novelist Abdulrazak Gurnah “for his uncompromising and compassionate penetration of the effects of colonialism and the fate of the refugee in the gulf between cultures and continents.” pic.twitter.com/zw2LBQSJ4j

— The Nobel Prize (@NobelPrize) October 7, 2021

தொடர்புடைய செய்தி: 2021 வேதியியலுக்கான நோபல் பரிசு: பென்ஜமின் லிஸ்ட், டேவிட் மெக்மில்லனுக்கு அறிவிப்பு

இலக்கிய நோபல் பரிசு விருதை பெற்றுள்ள அப்துல் ரசாக், தான்சானியா நாட்டை சேர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். தனது 21 வயதில்தான் இவர் இலக்கியம் சார்ந்த எழுதத் தொடங்கினார். பல நாவல்களை இயற்றிய அவர், சமீபத்தில் வளைகுடா நாடுகளில் அகதிகள் குறித்து எழுதியிருந்த புத்தகத்திற்காக நோபல் பரிசை பெறுகிறார்.

Read Entire Article