வெள்ளத்தில் சிக்கிய 500 பக்தர்கள் மீட்பு

3 years ago 847

திருநெல்வேலி:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நம்பியாற்றில் சிக்கிய 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் திருமலைநம்பிக் கோவில் உள்ளது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் நேற்று முதன்முறையாக பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதியளித்திருந்தனர். இதனால் கோவில் விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் சென்றிருந்தனர்.

மலைப்பகுதியில் பெய்த மழையால் நம்பியாற்றில் காலை 10:30 முதல் 12:00 மணி வரையிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவிலுக்கு செல்லும் பாதையில் நம்பியாற்றின் மீது கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மேல்பரப்பில் வெள்ளம் சென்றது.இதனால் கோவிலுக்கு சென்றவர்கள் திருக்குறுங்குடி திரும்ப முடியாமல் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் 500க்கும் மேற்பட்ட பக்தர்களை கயிறுகட்டி மீட்டனர்.

பெண் மாயம்

கோவையில் நேற்று பகல் 1:30 மணி முதல் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. தொண்டாமுத்துார் அருகே ஒரத்திமலையில் இருந்து உருவாகும் பள்ள ஓடை, மத்திபாளையம் வழியாக, சென்னனுார் குட்டைக்கு செல்கிறது. இப்பள்ளத்தில் நேற்று கன மழையால் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மத்திபாளையத்தைச் சேர்ந்த விஜயா, 55, மற்றும் மூன்று பேர், தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு திரும்பினர். அப்போது ஓடையில் இறங்கி சாலைக்கு வரும்போது மழை வெள்ளத்தில் விஜயா அடித்து செல்லப்பட்டார். தீயணைப்பு துறையினர் தேடுதல் நடத்துகின்றனர்.

Advertisement

Read Entire Article