விதிமுறை பின்பற்றினால் தரிசனத்துக்கு அனுமதி :குக்கே சுப்ரமண்யர் கோவிலில் விதிமுறை அமல்

3 years ago 297

தட்சிண கன்னடா:கொரோனா விதிமுறைகளை பின்பற்றும் பக்தர்களுக்கு மட்டும், குக்கே சுப்ரமண்யர் கோவில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.தட்சிண கன்னடா குக்கே சுப்ரமண்யர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

கொரோனா 3வது அலை பீதி, இன்னும் விலகாததால், கோவிலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றினால்தான், கோவிலுக்குள் நுழைய முடியும். கோவிலின் நுழைவு வாசல் அருகில், பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. கோவில் ராஜ கோபுரத்தின் தலைமை நுழைவு வாசலில் மட்டுமே பக்தர்கள் நுழைய அனுமதியுள்ளது.

மற்ற நுழைவு வாசல்கள் வழியாக செல்ல வாய்ப்பில்லை. சர்ப்ப சேவை யாகசாலையில் தினமும் 100 பக்தர்கள் மட்டுமே பங்கேற்கலாம். பங்கேற்கும் பக்தர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். தினமும் 25 நாக பிரதிஷ்டை, 5 பஞ்சாமிர்த அபிஷேகத்துக்கு அனுமதி உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கோவிலின் ராஜ கோபுரம் அருகில், கொரோனா தடுப்பூசி மையம், பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்களும், கோவிலின் ஊழியர்கள், தடுப்பூசி பெறுகின்றனர்.குக்கே சுப்ரமண்யா கோவிலின் நிர்வாக கமிட்டி தலைவர் மோகன்ராம் கூறியதாவது:கோவிலுக்கு வரும் பக்தர்கள், கட்டாயமாக கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற, கொரோனா நெகடிவ் அறிக்கை வைத்திருந்தால், கோவில் சேவைகளில் பங்கேற்க அனுமதியுள்ளது. பக்தர்கள் சமூக விலகலை பின்பற்றுகின்றனரா, முக கவசம் அணிந்துள்ளனரா என்பதை கண்காணித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆங்காங்கே ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Read Entire Article