விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்’ - 25 வது நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்

3 years ago 941

Actor-vijay-antony-in-Kodiyil-Oruvan-25th-Day-celebrations-by-the-Team

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் 25 வது நாள் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது படக்குழு.

அறிமுக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. ஆத்மிகா ஹீரோயினாக நடிக்க வில்லனாக ’கேஜிஎஃப்’ வில்லன் ’கருடன்’ ராமச்சந்திர ராஜு நடித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை பரவலால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

image

இதனையொட்டி, ‘கோடியில் ஒருவன்’ வெளியானது. கொரோனா இரண்டாவது அலைக்குப்பிறகு தியேட்டர்களில் வெளியான படங்களில் ’கோடியில் ஒருவன்’ நல்ல வசூலைக் கொடுத்தது என்று சினிமாத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

imageஇந்த நிலையில், படத்தின் 25 வது நாள் வெற்றிக்கொண்டாட்டத்தை நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்டப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Read Entire Article