'வாழ்த்துகள் மோடி ஜி' - குளோபல் ஹங்கர் இன்டெக்ஸை மேற்கொள்காட்டி கலாய்த்த கபில் சிபல்

3 years ago 787

Congratulations-Modi-Ji-Kapil-Sibal-As-India-Slips-In-Hunger-Index

பசி தீவிரமான நாடுகள் பட்டியலில் இந்தியா 101வது இடத்தை பிடித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

உலக பட்டினி அறிக்கையின்படி மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. 94வது இடத்திலிருந்த இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, பசி தீவிரமான நாடுகள் என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. கடந்தாண்டு வெளியான இந்த அறிக்கையில் 107 நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் இருந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் (92), நேபாளம் (76), பங்களாதேஷைக்காட்டிலும் இந்தியா பின்தங்கியிருக்கிறது.

image

இதை குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பசி, வறுமை, உள்ளிட்டவற்றை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்' என்று கிண்டலுடன் பதிவிட்டுள்ளார். மேலும், குளோபல் இன்டெக்ஸில் பசி தீவிரமான நாடுகளில் 2020ம் ஆண்டு இந்தியா 94 வது இடத்தில் இருந்ததையும், தற்போது 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Congratulations Modi ji for eradicating :
1) poverty
2) hunger
3) making India a global power
4) for our digital economy
5) …………… so much more

Global Hunger Index :

2020 : India ranked 94
2021 : India ranks 101

Behind Bangladesh , Pakistan & Nepal

— Kapil Sibal (@KapilSibal) October 15, 2021

இது தொடர்பான செய்திக்கு இங்கே க்ளிக் செய்யவும் - ’பசி தீவிரமான நாடுகள்’ - ''குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்' பட்டியலில் இந்தியாவுக்கு 101வது இடம்

Read Entire Article