முப்படை தலைமை தளபதியை தேர்வு செய்வது எப்போது?

3 years ago 873

புதுடில்லி-'முப்படை புதிய தலைமை தளபதியை தேர்வு செய்யும் நடைமுறைகள் முடிய தாமதம் ஆகும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

latest tamil news

ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை என முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதியை நியமிப்பது குறித்து 2019ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழா உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தார்.

இதையடுத்து புதிய முப்படை தலைமை தளபதியை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.ஆயுதப்படையில் 'கமாண்டிங் ஆபீசர்' அல்லது அதற்கு இணையான அந்தஸ்தில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு தகுதி பெறுகின்றனர். இந்த பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 65.தற்போது ராணுவ தளபதியாக உள்ள ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, 61, அப்பதவியில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிபின் ராவத் மறைவுக்குப் பின் முப்படை தளபதிகளின் குழுவுக்கு தலைவராக நரவானே பொறுப்பேற்றார்.

latest tamil news

இந்நிலையில் முப்படையின் புதிய தலைமை தளபதியை தேர்வு செய்யும் நடைமுறைகள் துவங்கிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய தலைமை தளபதியை தேர்வு செய்வதில் நாங்கள் அவசரப்படவில்லை. அதற்கான நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளன. அது முடிய தாமதம் ஆகும். உடனடியாக அறிவிக்கப்பட வாய்ப்பில்லை' என்றார்.

Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

அப்புசாமி 60 வயசுக்கு முன்னாடி நியமிச்சு ரிடையர் ஆகும் போது வீட்டுக்கு ஓய்வு குடுத்து அனுப்பிடுங்கோ... முப்படைத் தளபதி வேலை ஒண்ணும் ஜானாதிபதி, பிரதமர் வேலை இல்லை. அதற்கு துடிப்பானவர்கள் தேவை. பதவி நீட்டிப்பு குடுத்து டென்சன் பண்ணாதீங்க.

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article