முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு பாதிப்பு: எய்ம்ஸ் மருத்துவமனை

3 years ago 1334

Puthiyathalaimurai-logo

இந்தியா

16,Oct 2021 08:59 PM

Former-PM-Manmohan-Singh-diagnosed-with-dengue-AIIMS-official

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

89 வயதான மூத்த காங்கிரஸ் தலைவர் மன்மோகன்சிங் புதன்கிழமையன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவர் கார்டியோ-நியூரோ மையத்தில் உள்ள மருத்துவமனையின் தனியார் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதனைப்படிக்க...தமிழகத்தில் ஒரேநாளில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article