மாத இறுதியில் கொரோனா உச்சம்; கணித ஆய்வாளர் புதிய தகவல்

3 years ago 900

புதுடில்லி-'கொரோனா மூன்றாவது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும். நாடு முழுதும் நாள் ஒன்றுக்கு 4 - 8 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாவர்' என, ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

latest tamil news

கணித சூத்திரம்கொரோனா தொற்று பரவலில் முந்தைய அலைகளின் பாதிப்பு தீவிரத்தை கணித சூத்திரத்தின் அடிப்படையில் கணித ஆய்வாளர் மணிந்தர் அகர்வால் கணித்து வருகிறார். உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பேராசிரியரான இவர், மத்திய அரசின் உதவியுடன் இந்த பணியை செய்து வருகிறார்.

மூன்றாவது அலை குறித்து இவர் கூறியதாவது:மூன்றாவது அலையை ஏற்கனவே சந்தித்து வரும் மும்பை மற்றும் டில்லி நகரங்களில் இம்மாத மத்தியில் தொற்று பரவல் உச்சம் தொடும். டில்லியில் நாள் ஒன்றுக்கு 50 - 60 ஆயிரம் பேருக்கும், மும்பையில் 30 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும்.இந்த மாத இறுதியில் நாடு முழுதும் மூன்றாவது அலை உச்சம் தொடும்.

latest tamil news

அப்போது நாள் ஒன்றுக்கு 4 - 8 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாவர். ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அலை தொற்று பரவும் விதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தேர்தல் பிரசாரங்கள்மூன்றாவது அலை வேகமாகப் பரவக் காரணமான பல விஷயங்களில் தேர்தல் பிரசாரங்கள் ஒன்றாக இருக்கும். அதை மட்டும் நீக்குவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்திவிட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

அப்புசாமி கம்பியூட்டரில் மீசை, தாடியெல்லாம் வரைஞ்சு பாத்து கொரோனாவின் அசல் முகத்தை தோலுரிச்சு காட்டுங்க.

Cancel

தமிழ்ச்செல்வன் இதைத்தவிர சென்னை கணிதவியல் பேராசிரியர் ஜெயந்த் ஜா கூட இதே போன்றதொரு ஆய்வு முடிவினை வெளியிட்டார் அடுத்த மாதம் (பிப்ரவரி) துவக்கத்தில் மூன்றாமலை உச்சமெடுக்கும் என்றார்

Cancel

Mani . V ".....கணித சூத்திரம் கொரோனா தொற்று பரவலில் முந்தைய அலைகளின் பாதிப்பு தீவிரத்தை கணித சூத்திரத்தின் அடிப்படையில் கணித ஆய்வாளர்......" 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல் யார் எதை சொன்னாலும் நம்ப வேண்டியது நம் தலையெழுத்து. நாளை வரலாற்றுப் பேராசிரியர் சொன்னாலும் நாம் நம்பித்தான் ஆகணும். இதுக்கெல்லாம் கணித சூத்திரம் உதவுமுன்னு தெரியாமப் போச்சே.

Cancel

மேலும் 1 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article