மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்ப நிறுவனங்களில் வருமான வரித்தறை சோதனை

3 years ago 486

மும்பை : மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு சொந்தமான இரண்டு ரியல் எஸ்டேட் குழுமங்கள், கணக்கில் காட்டாமல் 184 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.

latest tamil news

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில், சமீபத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:மஹாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 70 இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது இரண்டு ரியல் எஸ்டேட் குழுமங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

latest tamil news

அந்த இரண்டு குழுமங்களும் 184 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் வருமானம் ஈட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், கணக்கில் காட்டப்படாத 2.13 கோடி ரூபாய் பணமும், 4.32 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

duruvasar மிரட்டல் அரசியலுக்கு போட்டியிருக்கிறதென்று கோபப்படுவது இயற்கையே. நம்ம லெவலுக்கு அவிக இறங்கி வேலை செய்யமுடியாது என்பது மகிழ்சிதானே.

Cancel

Nagar அஜித் பவார் என்ற கொள்ளையன் மஹாராஷ்டிராவில் பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது தொண்ணுறுஆயிரம் கோடி ஊழல் செய்து ராஜ்யத்தை கொள்ளை அடித்தான். விவசாயிகளுக்கு பாசன நீர் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். குடி தண்ணீர் இல்லாமல் மக்கள் ரயில் வண்டிகளை நிறுத்தி அதில் நீர் பிடிக்கும் கட்டாயம் இன்றும் உள்ளது

Cancel

Nagar தாவூத் இப்ராஹிமிடமிருந்து இருநூறு கோடி லஞ்சம் பெற்று மும்பை தொடர் வெடிகுண்டு செய்ய உதவிய சரத் பவாரை உடனே தூக்கிலடவேண்டும். வோஹ்ரா கமிட்டி அறிக்கையை வெளியிட்டு இந்த தேச துரோகிகளை உடனே கைது செய்யுங்கள்

Cancel

மேலும் 5 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article