மதுரை: வெறிச்சோடிய சாலைகளில் ஸ்கேட்டிங் விளையாடிய சிறுவர்கள்.. திருப்பி அனுப்பிய போலீசார்

3 years ago 348

Puthiyathalaimurai-logo

தமிழ்நாடு

09,Jan 2022 03:29 PM

Full-Curfew-Boys-enjoying-skating-on-deserted-Madurai-roads

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய மதுரை சாலைகளில் சிறுவர்கள் ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ந்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊடங்கு அமல்படுத்தபட்ட நிலையில், மதுரை நகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

image

இந்நிலையில் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைகடை பஜார் பகுதி சாலை முழுவதிலும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருந்ததால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் சாலையில் ஸ்கேட்டிங் விளையாடி மகிழ்ந்தனர்.

image

அதை பார்த்த காவல்துறையினர் அவர்களுடைய விளையாட்டு திறமையை கண்டு பாராட்டியதோடு கொரோனா பரவல் இருப்பதால் இது போன்று வெளிப்புறங்களில் விளையாட அனுமதி இல்லை எனக்கூறி சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து ஊரடங்கு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article