மகாராஷ்டிரா முதல்வரின் மனைவியை குறித்து சர்ச்சை 'ட்வீட்': பாஜக தொண்டருக்கு சம்மன்

3 years ago 793

BJP-man-calls-Maharashtra-CM-Uddhav-Thackeray-wife-Marathi-Rabri-Devi-Mumbai-Police-summons-him

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரேவை "மராத்தி ராப்ரி தேவி" என்று ட்வீட் செய்த பாஜக தொண்டருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு சமீபத்தில் முதுகெலும்பில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பிறகு பெரும்பாலான நாட்களில் அவர் ஓய்வில் இருப்பதால் முதல்வர் பொறுப்பை  உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி வாஹினி அல்லது அவரது மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு வழங்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.

image

இந்த நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த  பாஜக தொண்டர் ஒருவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரேவை "மராத்தி ராப்ரி தேவி" என்று கூறி ஆட்சேபனைக்குரிய ட்வீட்டைப் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. ராஷ்மி தாக்கரேவை பீகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியுடன் ஒப்பிட்டுப் பேசியதாக பாஜகவை சேர்ந்த ஜித்தன் கஜாரியாவுக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க: பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: கன்னியாகுமரியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

Read Entire Article