பொன்னேரி: தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையில் இறந்தாரா சிறுமி? காவல்துறை விசாரணை

3 years ago 400

Police-investigates-with-private-hospital-in-the-Ponneri-girl-death

பொன்னேரியில் 7 வயது சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் அதிகளவில் மருந்து கொடுத்ததாகவும், அதனால் குழந்தையின் உடல் மோசமடைந்தாகவும் கூறப்படுகிறது. இதனால் குழந்தை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்திருக்கிறார். இதனால் உறவினர்கள் தனியார் மருத்துவமனை மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய 7 வயது மகள் லக்‌ஷிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி பொன்னேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. இதனையடுத்து,  வீட்டிற்கு சென்ற உடன், சிறுமியின் உடலில் ஒவ்வாமை காரணமாக கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் 30-ஆம் தேதி அதே மருத்துவமனைக்கு வந்த போது, அரசு மருத்துவமனைக்கு போக அறிவுறுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவ மனையில் சிறுமி லக்‌ஷிதா அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்திருக்கிறார்.

image

இதைத்தொடர்ந்து சிறுமிக்கு ஏற்கெனவே சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையில் அதிகளவு மருந்து செலுத்தியதாலேயே சிறுமி உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனை மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article