புதுச்சேரி: தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்திக்கான அரசு விடுமுறை ரத்து

3 years ago 817

புதுச்சேரியில் அடுத்தாண்டிற்கான அரசு விடுமுறைப் பட்டியலில் இருந்து, மே 1 தொழிலாளர் தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கான அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2022 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மே 1 தொழிலாளர் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி சேர்க்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய இரு நாட்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பு செயலர் கிரண் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணை நிலை ஆளுநரின் உத்தரவுப்படியே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் அரசு விடுமுறை தினங்களை ரத்து செய்வது, வழக்கமான நடைமுறை தான் எனவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article