பிறந்தநாளில் இயக்குநர் பாலுமகேந்திரா மனைவி அகிலாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய சீனு ராமசாமி

3 years ago 392

Seenu-Ramasamy-receiving-blessings-from-director-balu-mahendra-wife-Akila-on-his-birthday

தனது பிறந்தநாளையொட்டி மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் மனைவி அகிலா பாலுமகேந்திராவிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விரைவில் ‘மாமனிதன்’, ‘இடிமுழக்கம்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. ’தென்மேற்கு பருவக்காற்று’,‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ என்று தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் சீனு ராமசாமி தமிழ் சினிமாவின் அழியா கோலங்களாய் தனது படைப்புக்களால் நிலைத்திருக்கும் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராய் பணிபுரிந்தவர்.

image

இப்போதும், குரு பக்தியுடன் இருக்கிறார். நேற்று தனது பிறந்தநாளையொட்டி மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் மனைவி அகிலா பாலுமகேந்திராவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார். இதனை, நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார் சீனு ராமசாமி.

image

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் பாலு மகேந்திரா மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article