பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தில் வரும் 20 முதல் கணக்கெடுப்பு

3 years ago 837

பெங்களூரு-பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தில், வரும் 20 முதல் 25 வரை புலிகளின் கணக்கெடுப்பு துவங்கவுள்ளது.இது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரியொருவர் கூறியதாவது:பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்பை முடித்து இந்திய வன விலங்குகள் அமைப்பு மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.எனவே வரும் 20 முதல் 25 வரை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். எம்.எம்.ஹில்ஸ் ஊழியர்கள், கேமராக்கள் பொருத்தும் பணிகள் செய்கின்றனர்.நாங்கள் பயிற்சிக்காக கேமராக்களை வேறு புலிகள் சரணாலயத்திலிருந்து கொண்டு வர வேண்டிஉள்ளது. புலிகளை மற்ற சரணாலயங்களுக்கு அனுப்புவதற்கு முன் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.தசரா முடிந்த பின் சைவ விலங்குகள், மாமிச விலங்குகளின் புள்ளி -விபரங்கள் தெளிவாக தெரியும்.புலிகள் கணக்கெடுப்புக்கு, நாகரஹொளே, பத்ரா, குதுரேமுக், காளி புலிகள் சரணாலய அதிகாரிகள் பயன்படுத்தப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Read Entire Article