படம் தரும் பாடம்

3 years ago 838

படம் தரும் பாடம்

நடிகர் விஜய் ராகவேந்திரா, புது விதமான கேரக்டர்களில் நடிப்பதில் ஆர்வம் காண்பிக்கிறார். சமீபத்தில் 'சீதாராம் பினோய்' படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது சைக்கலாஜிகல் திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்துக்கு 'க்ரேஜி கேம்ஸ்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. மொபைல் கேம்ஸ்களால் பிள்ளைகளின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதை விவரித்துள்ளனர். இதில் விஜய ராகவேந்திரா மனநல டாக்டராக நடிக்கிறார். இவரது தாயாக அபர்ணா, சைபர் கிரைம் பிரிவு போலீஸ் அதிகாரியாக பாவனா ராவ் நடிக்கின்றனர். படத்துவக்க விழாவில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சிவராம் பங்கேற்று வாழ்த்தினார்.

40 ஆண்டுக்கு முந்தைய பாடல்

கன்னட இலக்கியவாதி பூர்ணசந்திர தேஜஸ்வி எழுதிய கதைகளில் ஒன்றான 'டேர் டெவில் முஸ்தபா' திரைப்படமாக தயாராகிறது. இப்படத்தின் அனிமேஷன் பாடலொன்று வெளியிடப் பட்டு உள்ளது. இதில் மறைந்த நடிகர் ராஜ்குமார் இருப்பது குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுக்கு முன், ஒரு நாடகத்துக்காக வீரண்ணா இப்பாடலை எழுதியிருந்தார். முதல் முறையாக ராஜ்குமாரை காண்பித்துள்ளனர். இப்பாடலுக்குள் மைசூரு அரசர் ரனதீர கண்டீரவாவின், சாகச கதை உள்ளது. இப்பாடலுக்கு வாசுகி வைபவ் குரல் கொடுத்துள்ளார்.

ஆட்டம் போடும் ராகினி

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை ராகினி, மீண்டும் பட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். 'ராணா' என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் தென்படுகிறார். இப்பாடலை எழுதியவர் ஷிவு பைரகி. இதற்கு முன் 'விக்டரி' படத்தில், சரண், ராகினி நடனம் அசத்தலாக இருந்தது. பாடலும் ஹிட்டானது. தற்போது 'ராணா' படத்திலும், ராகினி ஆட்டம் போடும் பாடலை எழுதியவரும் ஷிவு பைரகிதான். இப்படத்தில் ரீஷ்மா நானய்யா நாயகியாக நடிக்கிறார்.

ரசிகர்கள் எரிச்சல்

நடிகை ரஷ்மிகா மந்தண்ணா, தெற்கிலிருந்து வடக்குக்கு பறந்தது, தெரிந்த விஷயம் தான். அடுத்தடுத்து இரண்டு ஹிந்தி படங்களில் நடிக்கிறார். தற்போது இவரது பார்வை, பெங்காலி திரையுலகம் மீது பதிந்துள்ளது. இவரது ரசிகர் ஒருவர், ரஷ்மிகா பெங்காலி கலாசாரப்படி உடையணிந்திருப்பது போன்று, ஓவியம் வரைந்து சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து குஷியடைந்த இவருக்கு, பெங்காலி மொழி படங்களில் நடிக்க ஆசை வந்துள்ளதாம். இவருக்கு வாழ்க்கை கொடுத்த கன்னடத்தை மறந்ததால், ரசிகர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.

தசரா முடிந்த பின் படப்பிடிப்பு

கொரோனா பலரின் வாழ்க்கையை, புரட்டி போட்டது. ஊரடங்கை மையமாக வைத்து, கிரைம், திரில்லர் பாணியில், திரைப்படம் தயாராகிறது. கொரோனா நேரத்தில், வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்துக்கு 'டெனன்ட்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் போஸ்டர் வெளியிடப் பட்டது. தசரா முடிந்த பின், படப்பிடிப்பை துவங்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் சோனு கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மீண்டும் உண்மை சம்பவம்

சாண்டல்வுட்டில், உண்மை சம்பவங்களை, அடிப்படையாக கொண்டு, பல படங்கள் திரைக்கு வந்து, வசூலையில் அள்ளின. தற்போது இந்த வரிசையில் மற்றொரு படம் தயாராகிறது. இப்படத்துக்கு 'அம்ருத் அபார்ட்மென்ட்' என பெயரிடப்பட்டுள்ளது. குருராஜ் குல்கர்னி இயக்கும், இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நபர்களின் உலகமே வேறு. இங்கு பல மொழி பேசுவோர் வசிக்கின்றனர். அபார்ட்மென்ட் ஒன்றில் நடந்த, உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

திருப்புமுனையாக அமையுமா?

நடிகை சஞ்சனா ஆனந்த், படபடப்பில் இருக்கிறார். இவர் நாயகியாக நடித்துள்ள, 'சலகா' அக்டோபர் 14ல், திரைக்கு வருவதே, அவரது படபடப்புக்கு காரணம். 'கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா' மூலம், சாண்டல்வுட்டில் கால் பதித்த இவர், தற்போது பட வாய்ப்புகளை அள்ளுகிறார். ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களில் நடிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு பின், இவரது நடிப்பில் 'சலகா' திரைக்கு வருவதால், தனக்கு கிடைக்கும் ரெஸ்பான்சை தெரிந்து கொள்ள, சஞ்சனா ஆனந்த் ஆவலுடன் காத்திருக்கிறார். இது தனக்கு திருப்பு முனையாக அமையும் என, அவர் நம்புகிறார்!

Read Entire Article