நாடு முழுவதும் நடைபெறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முதன்மை தேர்வுகள்

3 years ago 912

Primary-exams-including-IAS--IPS--IFS-held-across-the-country

மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முதன்மைத் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வு நேற்று தொடங்கி பொங்கல் விடுமுறைக்கு பிறகு 16மற்றும் 17ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறுகிறது.

முதல் நாள் பொதுப்பாடம் 1 மற்றும் பொதுப்பாடம் 2 ஆகியவை நடைபெற்ற நிலையில், இன்று காலை பொதுப்பாடம் 3 மற்றும் மதியம் பொது பாடம் 4 ஆகிய தேர்வுகள் நடைபெறுகிறது. பல மாநிலங்களில் கொரானா சூழலை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்வர்கள் எந்தவித பிரச்னையும் இன்றி தேர்வு மையங்களுக்கு செல்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் யுபிஎஸ்சி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கொரானா தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடப்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் முதன்மைத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஹால் டிக்கெட் சரிபார்ப்பு, வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 24 இடங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் பொறுத்தவரை சென்னையில் 2 இடங்களில் இதை தேர்வு நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடன்சி பள்ளி மற்றும் சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது. மாணவர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து தேர்வு மையங்களுக்கு பேருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Read Entire Article