நடிகர் டாம் ஹாங்ஸுக்கு ‘லால் சிங் சட்டா’ சிறப்புக் காட்சியை திரையிடும் அமீர்கான்

3 years ago 1013

Puthiyathalaimurai-logo

சினிமா

08,Jan 2022 04:59 PM

actor-Aamir-Khan-is-planning-to-Keep-a-special-screening-for-Tom-Hanks-closer-to-Laal-Singh-Chaddha-release

நடிகர் டாம் ஹாங்ஸை சந்தித்து ‘லால் சிங் சட்டா’ படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் அமீர்கான் திரையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கார் விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தினை அதிகாரபூர்வமாக ‘லால் சிங் சட்டா’வாக ரீமேக் செய்துள்ளார் நடிகர் அமீர்கான். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன், அமீர்கானும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கி முடித்துள்ளார். அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கரீனா கபூர், மோனா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ‘லால் சிங் சட்டா’ வெளியாகிறது. இதே தேதியில் யஷ் - பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’ படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

image

இந்த நிலையில், ‘பாரஸ்ட் கம்ப்’ படத்திற்காக சிறந்த நடிப்புக்காக ஆஸ்கார் விருதினை வென்ற டாம் ஹாங்ஸை அமெரிக்கா சென்று ‘லால் சிங் சட்டா’வின் சிறப்புக் காட்சியினை அமீர்கான் திரையிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘லால் சிங் சட்டா’ படவெளியீட்டின்போது அமீர்கானின் அமெரிக்கப் பயணம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நடிகர் டாம் ஹாங்ஸ் சிறந்த நடிப்புக்காக இதுவரை இரண்டுமுறை ஆஸ்கார் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article