தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் இணையும் விஷ்ணு விஷால்

3 years ago 1037

actor-Ravi-Teja-and-Vishnu-Vishal-jonts-in-a-new-film

தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார்.

’கிராக்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் ரவி தேஜா நடிப்பில் ‘ராமாராவ் ஆன் ட்யூட்டி’, ‘கில்லாடி’, ’ராவணாசுரன்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதில், ‘ராவணாசுரன்’ படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரவிதேஜா அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார். இதனை, ரவி தேஜாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து விஷ்ணு விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். விரைவில் மற்ற தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களின் படங்கள் பான் இந்தியா படங்களாக வருவதால் அனைத்து மொழிகளிலிருந்தும் ஒவ்வொரு நடிகர்களை நடிக்க வைக்கிறார்கள். சமீபத்தில்கூட அல்லு அர்ஜுனின் பான் இந்தியா படமான ‘புஷ்பா’ படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

இந்த நிலையில், இது ரவி தேஜாவின் பான் இந்தியா படமாகக்கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ்’, ‘எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

Read Entire Article