'தி கிரேட் இந்தியன் கிச்சன்' சிறந்த திரைப்படமாக தேர்வு - கேரள அரசின் விருதுகள் அறிவிப்பு

3 years ago 572

Puthiyathalaimurai-logo

சினிமா

17,Oct 2021 09:06 AM

kerala-state-award-announced

கேரளாவில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட THE GREAT INDIAN KITCHEN திரைப்படத்திற்கு அம்மாநில அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஜியோ பேபி இயக்கி இருக்கிறார். நடுத்தர குடும்பத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை கதைகளமாகக் கொண்டு வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. ஆணாதிக்கத்திற்கு எதிரான சில கேள்விகளை முன் வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

 Brilliant take on family, religion &  patriarchy | The News Minute

வெள்ளம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ஜெயசூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், கப்பெலா திரைபடத்தில் நடித்த நடிகை அன்னா பென்னுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருது என்னிவர் திரைப்படத்தை இயக்கிய சித்தார்த் சிவாவுக்கு கிடைத்துள்ளது. பிரித்விராஜ் நடித்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் சிறந்த பிரபலமான திரைப்படமாக தெரிவாகியுள்ளது. விருதுகளை தேர்வு செய்வதற்கான குழுவில், தமிழக நடிகை சுஹாசினி மணிரத்னமும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article