தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் ஓடிடியில் வெளியானது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’

3 years ago 968

actor-allu-arjun-pushpa-released-on-amazon-prime-ott

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ இதுவரை உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

image

புஷ்பா’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியிருந்தது. ரூ.22 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், 21 நாட்கள் கழித்து இன்று இரவு 8 மணிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘புஷ்பா’ வெளியாவதாக அறிவித்திருந்தது படக்குழு.

ஆனால், 8 மணிக்கு முன்னரே 6 மணிக்கு முன்கூட்டியே படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தியில் வெளியாகவில்லை. மேலும், ‘புஷ்பா’ படத்தின் சூப்பர் ஹிட் அடித்த ‘ஊ சொல்றியா’ பாடல் வீடியோவை இதுவரை வெளியிடாமல் இருந்த படக்குழுவினர் இன்று ஐந்து மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article