ஜனவரி 13-ல் வெளியாகும் சதீஷின் ‘நாய் சேகர்’: அதிகாரபூர்வ அறிவிப்பு

3 years ago 1032

actor-sathish-naai-sekar-Jan-13th-Release-In-Theatres

நடிகர் சதீஷின் ‘நாய் சேகர்’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவிருக்கிறது.

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில ’நாய் சேகர்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லக்‌ஷ்மி நடித்துள்ளார். கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் டீசரும் பாடல்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. நாயின் அனைத்து குணங்களும் மனிதனுக்கும், மனிதனின் குணங்கள் நாய்க்கும் சென்றால் எப்படியிருக்கும் என்பதையே படமாக உருவாக்கியுள்ளார்கள் என்பதை டீசர் உணர்த்தியது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

image

இந்த நிலையில், படத்திற்கு தற்போது யு சான்றிதழ் கிடைத்துள்ளது. 2 மணி நேரம் 12 நிமிடங்களாக உருவாகியுள்ளப் படம் வரும் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. கொரோனாவால் ‘வலிமை’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்டப் படங்களின் வெளியீடு தள்ளி வைத்திருப்பதால் சசிக்குமாரின் ‘கொம்பு வச்ச சிங்கமடா’, விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ உள்ளிட்டப் படங்கள் பொங்கலையொட்டி வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article