செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்?

3 years ago 787

Actor-Dhanush-plays-dual-role-Selvaraghavan-Naane-Varuven

செல்வராகவன் - தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ’மாறன்’ படங்களில் நடித்து வரும் தனுஷ் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கவிருப்பதாய் அறிவித்திருந்தார். இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. படப்பிடிப்பும் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்குவதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போதுவரை படப்பிடிப்பு துவங்கவில்லை. எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

image

த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட’நானே வருவேன்’ தயாரிப்பாளர் தாணுவுக்கு திருப்தியை தராததால் ‘புதுப்பேட்டை’ மாதிரி ஒரு தாதா கதையை உருவாக்கச் சொன்னதாகவும், பின்பு செல்வராகவன் கதையை மாற்றியிருப்பதோடு ராயபுரத்தில் அண்ணன் தம்பிகளைகொண்டு கதை நடப்பதால் படத்திற்கு ‘ராயன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் சமீபத்தில் உறுதியான தகவல்கள் வெளியாகின. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த நிலையில், தனுஷ் இப்படத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article