சீக்ரெட் சிங்காரம்

3 years ago 827

ரிபல் கட்சிக்காரர் வாபஸ்!இடைத் தேர்தல் நடக்கும் சிந்தகி தொகுதியில் பூ கட்சியின் அதிகார வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.இதனால் பூ கட்சியின் வெற்றிக்கு ஆபத்தானது. வெற்றி கை நழுவிட கூடாது என்பதால், முதல்வரே நேரடியாக போட்டி பூ வேட்பாளரை சந்தித்தார். வாபஸ் வாங்குமாறு வலியுறுத்தினார். முதல்வரின் ஆலோசனையை ஏற்று வாபஸ் பெற்றார். சிந்தகி தொகுதியில் பூ வின் வெற்றி பிரகாசமாக உள்ளதாக கூறிக்கொள்கின்றனர்.பாலுாட்டி வளர்த்த கிளி! மாநில கை கட்சியோட தலைவர் கமிஷன் பெற்றாருன்னு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தெரிவிச்சது வேறு யாருமல்ல.மாநிலத் தலைவரே பாலுாட்டி வளர்த்த கிளி தான். அவர் வளர்த்த பச்சைக்கிளி, தன் முதுகில் குத்தி விட்டதேன்னு புலம்பி இருக்கிறாரு.மாநில தலைவர் பேருல ஊழல், லஞ்ச முறைகேடு சி.டி., வெளியாகி இருக்குது. இது, புது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்குது.மீண்டும் பழைய கதை! கைக்கார கட்சியில் எட்டு வருஷமா மாநிலத்தலைவராக இருந்தவரையே முதல்வராக்க விடாமல் தடுக்க கதை, 'டாப் டூ பாட்டம்' வரை உள்ள கட்சிக்காரங்களுக்கு தெரியும்.புதுசா தலைவராகி ரெண்டு, மூணு வருஷம் கூட ஆகாதவரை முதல்வராக்க விடுவாரா. புதுப் புது பிரச்னைகளை அம்பலப்படுத்தி மாநிலமே வெறுக்க தக்க வகையில் ஊதி பெரிதுபடுத்தும் வேலையை அவர் செய்து வருகிறார்.வேறு யாரும் இதுபோல மோசமான வேலையை செய்ய மாட்டாங்கன்னு 'மாஜி' முதல்வர் பழி சுமத்தி இருக்காரு. கை கட்சி தலைவர் மீது அவதூறு ஏவுகணை பாய தொடங்கி விட்டது.ஆட்சியை நிர்ணயிப்பது யாரு?சிறுபான்மையினருக்கென மாநிலத்தில் அரசியல் கட்சி துவக்க மாவட்டம் தோறும் ஆள் சேர்க்கும் வேலையை துவக்கி இருக்காங்க.இது தேசியக் கட்சிகளுக்கு மிரட்டலாக இருப்பதாக ஒரு தரப்பில் பேசுகின்றனர். ஆயினும் அசம்பிளியில் சிறுபான்மையினர் பலத்தை அதிகரிக்கவும், ஆட்சியை நிர்ணயிப்பதும் சிறுபான்மையினர் தான் என்பதற்காகவே அரசியல் கட்சி உருவாகிறதாம்.கர்நாடகா முழுவதும் சிறுபான்மையினர் ஐக்கியம், வலுவடைய முக்கிய புள்ளிகள் சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.

Advertisement

Read Entire Article