‘சிறுத்தை’ சிவா படம் முடிந்தபிறகே ‘வாடிவாசல்’ படப்பிடிப்பில் இணையும் சூர்யா

3 years ago 807

Puthiyathalaimurai-logo

சினிமா

14,Oct 2021 08:12 AM

Suriya-joins-in-the-shooting-of-vaadivasal-after-the-completion-of-siruthai-siva

சூர்யா - ’சிறுத்தை’ சிவா இணையும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகே ’வாடிவாசல்’ படப்பிடிப்பு துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் நடைபெற்றது. அடுத்தப் படமாக இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியையொட்டி சிவாவின் ‘அண்ணாத்த’ வெளியாகிறது. சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ டிசம்பரில் வெளியாகிறது என்று அப்படத்தில் வில்லனாக நடிக்கும் வினய் தெரிவித்திருக்கிறார்.

image

சிவா - சூர்யா படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் தொடங்கவிருக்கிறது. 40 நாட்கள் சூர்யா ஒதுக்கியுள்ளார். இப்படத்தை முடித்தப்பிறகே, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article