கொரோனா தொற்றின் பக்கவிளைவுகளும், 'டயட்' முறைகளும் - ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்

3 years ago 474

Nutritionist-Divya-Sathyaraj-explains-How-to-handle-post-covid-side-effects-by-food-and-diet

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமானவர்கள் பலருக்கும் மருந்தின் தாக்கம் மற்றும் நோய்க்கிருமியின் தாக்கத்தால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இந்த பக்கவிளைவுகளை உணவு மற்றும் டயட் முறையின்மூலம் சரிசெய்வது குறித்து விளக்குகிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.

image

உடல்சோர்வு மற்றும் பலவீனம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் பலரும் தன்னால் முன்புபோல வேலை செய்யமுடியவில்லை என்றும், மாலை நேரங்களில் மிகவும் சோர்வாகவும், உடல் வலி இருப்பதாகவும் கூறுகின்றனர். இதற்கு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ராகியில் அதிக கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. அதேபோல் பாலில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. வெறும் பாலை குடிப்பதைவிட அதில் சிறிது மஞ்சள்தூள், வெல்லம் மற்றும் பட்டைப்பொடி சேர்த்துக் குடித்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

image

அடுத்து பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளின்மீது கவனம் செலுத்தவேண்டும். இது உடலுக்கு போதுமான எனர்ஜியைக் கொடுக்கக்கூடியது. இளநீரில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ஒருநாளில் 2 தம்ளர் இளநீர் சேர்த்துக்கொள்ளலாம். வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் தினமும் வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவு சாப்பிடுபவராக இருப்பின் தினமும் முட்டை சேர்ப்பதுடன், ஆட்டுக்கால் சூப் எடுத்துக்கொள்வது நல்ல பலனை தரும். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை எடுப்பவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் பரிந்துரைக்கப்படும்.

image

முடி உதிர்வு

கொரோனாவுக்குப் பிறகு பெரும்பாலானோர் சந்திக்கும் மற்றொரு பிரச்னை முடி உதிர்வு. இதற்கு சிறந்த தீர்வு வைட்டமின் பி. முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதில் ’பயோட்டின்’ வைட்டமின் முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே மருத்துவரின் பரிந்துரைப்படி பயோட்டின் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் பெரிய நெல்லிக்காய் போன்றவையும் முடி உதிர்தலுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும். மூன்று நெல்லிக்காய், 10 கறிவேப்பிலை மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை மோருடன் கலந்து ஒருமாதம் தொடர்ந்து குடித்தால் முடி உதிர்தல் பிரச்னை நின்றுவிடும். கொரோனா நோய்க்கு மட்டுமல்ல; பொதுவாகவே முடி உதிர்தல் பிரச்னை இருப்பவர்கள் இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலனைப் பெறமுடியும்.

image

சருமம் பொலிவுத்தன்மை இழத்தல்

மூன்றாவது பிரச்னை சருமம் பொலிவுத்தன்மை இழத்தல். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கூறும் மற்றொரு பிரச்னை சருமம் புத்துணர்ச்சியுடன் இல்லை என்பதுதான். மேலும் மாஸ்க் அணிந்துகொண்டே இருப்பதால் முகத்தில் அலர்ஜி மற்றும் கருமை படர்கிறது என்று கூறுகின்றனர். சருமத்தின் புத்துணர்ச்சியை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி. பப்பாளி, தர்பூசணி போன்ற பழங்களில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. ஆரஞ்சு மற்றும் கொய்யா போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. எனவே தினசரி இந்த 4 பழங்களை டயட்டில் சேர்த்துக்கொள்ளும்போது சருமம் தனது பொலிவுத்தன்மையைத் திரும்பப்பெறும்.

image

சீரற்ற மாதவிடாய்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்களில் சிகிச்சை காரணமாக பெரும்பாலானோருக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்னை இருப்பதாகக் கூறுகின்றனர். இந்தப் பிரச்னைக்கு மல்டி வைட்டமின்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் பேரீச்சை மற்றும் அத்திப்பழத்தை கட்டாயம் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு இந்த பிரச்னை நீடித்தால் கட்டாயம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

சந்திரசேகர் ஆசாத் Vs ஆகாஷ் ஆனந்த் - உ.பி-யில் பட்டியலின மக்களை கவரும் புதுயுக தலைவர் யார்? 

Read Entire Article