கூடுதல் தடுப்பூசிக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு

3 years ago 807

reservation-started-from-today-for-vaccinating

கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் அதற்கான மையத்திற்கு சென்று இன்று முதல் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மருத்துவ துறையினர், முன்கள பணியாளர்கள், இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியிருந்தது. 3ஆவது தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் சுகாதாரத்துறை கூறியிருந்தது. இந்நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

3ஆவது தடுப்பூசி திட்டம் குறித்த விரிவான அட்டவணை இன்று அறிவிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறையும் இன்று தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் சிலருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போட வேண்டும் என அதை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலருக்கு மற்ற தடுப்பூசிகள் போடப்படுவதாகவும் ஆனால் தங்களுக்கு மட்டுமே அரசின் அனுமதி இருப்பதாகவும் பாரத் பயோடெக் விளக்கமளித்துள்ளது

Read Entire Article