கிராமத்தான குணமாத்தானே பாத்துருக்க.. கோவப்பட்டு பாத்ததில்லையே - மிரட்டும் அண்ணாத்த டீசர்

3 years ago 304

Annaatthe-movie-Official-Teaser

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

image

தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

image

வெறித்தனமான வெயிட்டிங்குக்கு கிடைத்த விருந்தாக கிடா மீசையுடன் மாஸாக வலம் வருகிறார் ரஜினி. சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறார். அவரது பைக்கில் ரஜினி வரும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமையும் என்பதில் மாற்றமில்லை. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லை என்றாலும் பிரச்னையில்லை, அந்த குறையை அண்ணாத்த திரைப்படம் நிறைவேற்றும் என தெரிகிறது. ‘வயசனாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகலயே’ என ரசிகர்கள் சோஷியல் மீடியோவில் கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

Read Entire Article