காங்கிரசை ஒழிப்பது எப்படி?வழி காட்டுகிறார் விஜயேந்திரா!

3 years ago 833

சித்ரதுர்கா-''காங்கிரசை ஒழிப்பதற்கு எந்த எதிர்க்கட்சியும் தேவையில்லை. அக்கட்சி தலைவர்களே போதும்,'' என மாநில பா.ஜ., துணைத்தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.சித்ரதுர்காவில் அவர் நேற்று கூறியதாவது:ஒரு காலத்தில் தேசிய கட்சி என கூறிக்கொண்ட காங்கிரஸ் தற்போது தேசிய அளவில் தன் நிலைத்தன்மையை இழக்கிறது. சில மாநிலங்களில் மட்டும் சக்தியை தக்க வைத்துள்ளது.இக்கட்சியை ஒழிக்க எந்த எதிர்க்கட்சிகளும் தேவையில்லை. காங்கிரஸ் தலைவர்களே போதும். இக்கட்சியில் உட்பூசல் அதிகரித்துள்ளது.காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க, இக்கட்சியினரே போதும். வேறு கட்சி தேவையில்லை. பஞ்சாபில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ், உடைந்து மூன்றாக சிதைந்துள்ளது. வரும் நாட்களில், கர்நாடகாவிலும் கூட இக்கட்சி உடையும்.கலபுரகி, பெலகாவி, ஹூப்பள்ளி -- தார்வாட் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்காளர்கள் பா.ஜ., வின் கையை பிடித்தனர். ஹனகல், சிந்தகி இடைத்தேர்தலிலும் பா.ஜ., வெற்றியடையும்.வருமான வரித்துறையினர் சோதனை நடப்பது சகஜம் தான். இதற்கும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பசவராஜ் பொம்மை முதல்வரான பின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அபிவிருத்தி பணிகளை மேற்கொள்கிறார்.எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எடியூரப்பா ரகசியமாக சந்தித்தனர் என்பது உண்மையில்லை. இது குறித்து எடியூரப்பா விளக்கமளித்துள்ளார். குமாரசாமி கூறியதில் அர்த்தமில்லை. அரசியல் நோக்கத்தில் இது போன்று கூறுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Read Entire Article