ஓடிடியில் நேரடியாக வெளியானது டாப்ஸியின் ’ராஷ்மி ராக்கெட்’

3 years ago 879

Puthiyathalaimurai-logo

சினிமா

15,Oct 2021 07:46 AM

actress-taapsee-pannu-Rashmi-Rocket-is-out-now-on-ZEE5

நடிகை டாப்ஸி நடித்துள்ள ’ராஷ்மி ராக்கெட்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

இந்தியாவின் முன்னணி நடிகையான டாப்ஸி நடிப்பில் அகர்ஷ் குரானா இயக்கியுள்ள ‘ராஷ்மி ராக்கெட்’ இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. விளையாட்டுக் கதைக்களத்தைக்கொண்ட இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர் ‘ஒரு கல்லூரியின் கதை’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படங்களின் இயக்குநர் நந்தா பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று அதிகாலை 12 மணிக்கு ஜீ 5 ஓடிடி தளத்தில் ‘ராஷ்மி ராக்கெட்’ வெளியாகியுள்ளது.

image

டாப்ஸி நடிப்பில் அடுத்ததாக‘லூப் லாபேடா’, ‘டோபாரா’, ‘சபாஷ் மிது’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சபாஷ் மிது’ இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது. நடித்துக்கொண்டே தான் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி ’அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார்.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article