ஊர்க்குருவி ஆன கவின்

3 years ago 799

அண்ணாத்த படத்தை அடுத்து தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல், ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து அட்லி இயக்கும் படம் மற்றும் தெலுங்கில் ஹாட்பாதர், மலையாளத்தில் கோல்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் கூழாங்கல் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ள நயன்தாரா, தற்போது பிக்பாஸ் கவின் நடிப்பில் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். விக்னேஷ்சிவனின் உதவியாளர் அருண் பேட்ரிஷியன் இயக்கும் இந்த படத்திற்கு ஊர்க் குருவி என பெயர் வைத்துள்ளனர்.

விக்னேஷ்சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ள கவின், தன் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவேன் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் கூறுகையில், ‛‛அருணின் ஐடியா மற்றும் தெளிவான சிந்தனை என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்தி கொண்டே இருக்கும். அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சி. தமிழகத்தின் தென்பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. ஊர்குருவி படம் ரசிகர்களுக்கு இன்பமான அனுபவத்தை தரும்,'' என்றார்.

Read Entire Article