இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,796 பேர் உயிரிழப்பு

3 years ago 1100

Puthiyathalaimurai-logo

ஹெல்த்

05,Dec 2021 01:46 PM

2-796-people-died-in-a-single-day-due-to-corona-In-India

இந்தியாவில் கொரோனா காரணமாக ஒரே நாளில் மீண்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 895 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்து 796 பேர் உயிரிழந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

image

எனினும் பீகார், கேரளாவில் ஏற்கெனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 98 புள்ளி 35 ஆகவும், உயிரிழப்பு விகிதம் ஒன்று புள்ளி 37 ஆகவும் உள்ளது.

இதனைப்படிக்க...ஒமைக்ரான் பரவல்: திட்டமிட்டபடி தென்னாப்ரிக்கா செல்லும் இந்திய அணி 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article