“அருமை நண்பர் ஸ்ரீகாந்த் ஆத்மா சாந்தியடையட்டும்” - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

3 years ago 810

May-the-soul-of-dear-friend-Actor-Srikanth-rest-in-peace-Actor-Rajinikanth-condolences

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

’தங்கப் பதக்கம்’, ‘பைரவி’ உள்ளிட்டப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார். அவருக்கு வயது தற்போது 82 ஆகிறது. 1965 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தார்.

ஸ்ரீகாந்த் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் முதல் படமான பைரவி படத்தில் முதன்மையான எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article