அரியவகை நோயால் தவித்த சிறுமி - காப்பாற்றி சாதித்த மதுரை அரசு மருத்துவர்கள்

3 years ago 880

doctors-cured-Mixed-Connective-tissue-disease

அரியவகை நோயின் காரணமாக நடக்க முடியாமல் தவித்த 11 வயது சிறுமிக்கு விலை உயர்ந்த சிகிச்சையின் மூலம் நடக்க வைத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த ஏழுமலை மற்றும் ஜோதி தம்பதியின் 11 வயது மகள் பிரீத்தி. திடீரென மூட்டு வலி, இடுப்பு வலி காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முடக்கு வாத பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறுமிக்கு கலப்பு இணைப்பு திசு நோய் (Mixed Connective tissue disease) எனப்படும் அரிய நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசத்தில், ஐவிஐஜி (IVIG) எனப்படும் சிறப்பு உயிர்காக்கும் மருந்து அளிக்கப்பட்டு, 6 முறை இரத்த சுத்திகரிப்பு செய்து 23 நாட்களில் நடக்க வைத்துள்ளனர்.

image

சிகிச்சையின்போது சிறுமியின் தந்தை இறந்த சோகத்திற்கிடையே, அவருக்கு அந்த தகவல் தெரியாமல் மிகுந்த அன்பையும், அக்கறையும் அளித்து மருத்துவர்கள் அவரை காப்பாற்றி உள்ளனர். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் 25 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

திறம்பட சிகிச்சை மேற்கொண்டு சிறுமியை காப்பாற்றி குழந்தைகள் நலம், நரம்பியல், முட நீக்கியல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மருத்துவர்களுக்கு மருத்துவமனை டீன் ரத்தினவேலு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read Entire Article