அப்துல் கலாமின் 90வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து

3 years ago 849

புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் பிறந்தவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். சிறுவயதில் ஏழ்மையின் பிடியில் சிக்கிய அப்துல்கலாம், கல்வியில் சிறந்து விளங்கி, இந்திய விண்வெளி துறையான இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்துல் கலாம் தலைமையில் அணு ஆயுத சோதனை நடத்தி, இந்தியா தனது பலத்தை உலகிற்கு வெளிக்காட்டியது. இதன்மூலம் புகழ்பெற்ற அப்துல் கலாம் நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.

இளைஞர்கள், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் சொற்பொழிவாற்றும் இவரது பிறந்தநாளான அக்.,15 ஐ.நா சபையால் உலக மாணவர் தினமாக 2010ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர்கள் தினமாக அக்டோபர் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவர் 2015ம் ஆண்டு ஜூலை 27ல் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுதே மாரடைப்பில் காலமானார். இன்று (அக்.,15) அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உதம்பூரில் உள்ள வடக்கு பிராந்திய ராணுவ அலுவலகத்தில் கலாமின் புகைப்படத்திற்கு கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

latest tamil news

பிரதமர் மோடி:

ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்.

ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன்:

நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்.

— Kamal Haasan (@ikamalhaasan) October 15, 2021

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

நாட்டுப்பற்றுக்கு நல்ல பொருள் ஆனவரே
தேசத்தை தெய்வமென்று தொழுதவரே
சீறிப்பாயும் ஸ்ரீராமனின் பாணத்திற்கு பிறகு காற்றை கிழித்தது கலாமின் ராக்கெட்டுகள் தான்

இந்தியாவின் எதிரிகளை அமைதிப்படுத்தின
இணையத்தை இந்தியாவில் இமயப்படுத்தின

பாரதத்தின் ரத்தினமே உன் பிறந்தநாள் இத்தினமே ஸலாம் ஐயா! pic.twitter.com/EkWLg8dlwz

— K.Annamalai (@annamalai_k) October 15, 2021

அ.ம.மு.க பொதுச்செயலர் தினகரன்:

'சாதிக்க வேண்டும்' என்ற கனவும், 'உறுதியாக சாதிப்போம்' என்கிற நம்பிக்கையும், அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர். எல்லோருக்கும் பிடித்த இந்திய முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று! சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாம் அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்கிடுவோம்!

Advertisement

Read Entire Article