அபாய கட்டடங்கள்சதானந்த கவுடா ஆய்வு

3 years ago 783

பெங்களூரு:''கமலா நகரில் கட்டடம் இடிவதற்கு முன்பே, மக்கள் இடம் மாற்றப்பட்டனர். இல்லையென்றால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இது போன்ற அபாய நிலையில் உள்ள கட்டடங்களை, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், அடையாளம் காண வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.பி., சதானந்தகவுடா பரிந்துரைத்தார்.

பெங்களூரு மஹாலட்சுமி லே -- அவுட்டின், கமலாபுராவில் சில நாட்களுக்கு முன், வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட, ஆறு குடும்பங்களுக்கு, எம்.பி., சதானந்தகவுடா தனிப்பட்ட முறையில், தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.

பின் அவர் கூறியதாவது:கமலா நகரில் கட்டடம் இடிவதற்கு முன்பே, மக்கள் இடம் மாற்றப் பட்டனர். இல்லையென்றால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.இது போன்ற அபாய நிலையில் உள்ள கட்டடங்களை, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், அடையாளம் காண வேண்டும். 'நோட்டீஸ்' அளிப்பதுடன் நின்று விடக்கூடாது.

இது குறித்து, மாநகராட்சி தலைமை கமிஷனருடன் பேசியுள்ளேன்.ஏற்கனவே காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது. இந்நிலையில் கட்சித் தலைவர் குறித்து அக்கட்சி நிர்வாகிகள் சலீம், உக்ரப்பா பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கட்சி அலுவலகத்திலேயே, இதுபோன்று பேசியுள்ளனர். இதன் பின்னணியில், யாராவது இருக்க வேண்டும். அது யார் என்பதை சிவகுமார் தெரிந்து கொள்ளட்டும்.

அவர்கள் கட்சியின் தனிப்பட்ட விஷயம் பற்றி, பேச எனக்கு விருப்பமில்லை. காங்கிரசில் சித்தராமையா, சிவகுமார் என, இரண்டு பாகமாக பிரிந்துள்ளனர். அதற்கு ஒவ்வொரு சாட்சியாக கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Read Entire Article