அணு மின் நிலையம் கூடாது; நீர் மின் திட்டங்கள் கூடாது என்றால் இப்படித்தானே ஆகும்!

3 years ago 876
மாநில மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் கே.பாலகிருஷ்ணன்

: கடுமையான நிலக்கரி தட்டுப்பாட்டால், பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மோடி அரசின் இந்த தோல்வியால், நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும், வேலைவாய்ப்புகளும் மேலும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

அணு மின் நிலையம் வரக் கூடாது; நீர் மின் திட்டங்கள் கூடாது. விவசாய நிலங்கள் அருகே கூட காஸ் பைப் செல்லக் கூடாது என்றால், இப்படித் தானே ஆகும்!

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி:

தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து விட்டதாக ஒருவித மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் பா.ஜ., ஒருபோதும் காலுான்ற முடியாது.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், நீங்கள் சொல்வதை சற்று ஊர்ஜிதப்படுத்தத் தான் செய்கின்றன.



தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

: தி.மு.க., அரசு நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு மக்கள் தந்த மகத்தான பரிசு தான், உள்ளாட்சி தேர்தல் வெற்றி. மேலும், மீதமிருக்கும் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம்.

அ.தி.மு.க., விஜய் கட்சி போன்றவை வென்ற இடங்களில், தி.மு.க.,வின் வாக்குறுதிகள் சென்றடையவில்லையோ!

புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை

: நான் 'நீட்' தேர்வு எழுதி, வெற்றி பெற்று தான், 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் எம்.எஸ்., படிக்கிறேன். திராவிட வாரிசுகள் மாதிரி தத்தின்னு நினைக்காதீங்க.

latest tamil news

கஷ்டப்பட்டு படித்து, 'டாக்டர்' பட்டம் வாங்கிய உங்களைப் போன்ற சிலர் அரசியலில் இருக்கையில், படிக்காமலேயே டாக்டர் பட்டம் பெற்ற பலரும் தங்கள் பெயருக்கு முன், 'டாக்டர்...' என போட்டுக் கொள்கின்றனரே!

தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை

: நடிகர் சீமானின் நாம் தமிழர் என்ற கட்சி, இலங்கையில் நடந்த பல தேர்தல்களில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை மட்டக்களப்பு ஊராட்சியில் 416, கனடா ஒன்றிய கவுன்சிலில் 523, இதர உலகளாவிய நாடுகளின் கவுன்சிலில் 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கிண்டலுக்கும் ஒரு அளவில்லையா... உள்ளாட்சியில் சீமான் கட்சி படுதோல்வி அடைந்ததால், இப்படி எல்லாம் கிண்டல் செய்கிறீர்களா?

தமிழக பா.ஜ., தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை

: டில்லியில் உள்ள தமிழ்நாடு பவன் கட்டடத்தை, தி.மு.க., அரசு, 200 கோடி ரூபாயில் புதிய தமிழ்நாடு பவன் தங்கும் விடுதி கட்டத் திட்டமிடுகிறது. அதே வேளையில், 900 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மிக அவசியமான புதிய பார்லிமென்ட் கட்டடத்தை எதிர்க்கிறது.

நாட்டுக்கு தேவையான எதுவும் வரக் கூடாது. தேவையற்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... இது தான் அவர்களின் அரசியல்!

Read Entire Article