அடுத்த வாரம் 100 கோடி ஊசி:அமைச்சர் உறுதி

3 years ago 885

புதுடில்லி:''மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 'டோஸ்' 100 கோடி என்ற இலக்கை அடுத்த வாரம் எட்டும்,'' என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்த பிரபல பாடகர் கைலாஷ் கேரின் 'டிக்கா கீதம்' என்ற பாடல் வெளியீட்டு விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

கொரோனா தடுப்பூசி பணிகள் மிக விரைவாக நடக்கின்றன. நேற்று ஒரே நாளில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி 'டோஸ்'கள் மக்களை சென்றடைந்து உள்ளன.இது ஒட்டுமொத்த டோஸ்களின் அளவை 97.60 கோடிக்கும் அதிகமாக உயர்த்தி உள்ளது. கடந்த 17ம் தேதி ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் செலுத்தினோம்.

பணிகள் தீவிரமாக தொடர்வதால் மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை அடுத்த வாரம் 100 கோடியை கடக்கும்.மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர், இரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், 70 சதவீதம் பேர் கண்டிப்பாக முதல் டோஸ் போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 981 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது மே மாதம் 9ம் தேதி பதிவான அதிகபட்ச சராசரியுடன் ஒப்பிட்டால் 4 சதவீதம் மட்டுமே. கொரோனா தடுப்பூசி தயாரிக்க 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என கருதப்பட்டது. ஆனால் விரைவான ஆய்வுகளின் பலனாக உள்நாட்டில் தயாரான தடுப்பூசி மக்களை சென்றடைந்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:உள்நாட்டு தடுப்பூசிகள் பாதுகாப்பானவை அல்ல என மக்களிடம் எதிர்மறை கருத்துகளை உருவாக்க எதிர்க்கட்சியினர் முயன்றனர். ஆனால் எதிரி, அரசு அல்ல வைரஸ்தான் என மக்கள் உணர்ந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் உறுதி, கவனம், அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் காரணமாகவே, தடுப்பூசி பணிகள் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Read Entire Article